Showing posts with label தந்தை. Show all posts
Showing posts with label தந்தை. Show all posts

Sunday, June 21, 2009

தந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து



தந்தையர் தினத்திற்கு ஹரிணி வரைந்த வாழ்த்து அட்டை. ஹரிணிக்கு அப்பா மேல அன்பு அதிகம், அதே போல எனக்கும் , குறிப்பா சொல்லப்போனா, சந்தனமுல்லையின் பப்பு பதிவில் கூட ஹரிணியைப்பத்தி பேசி பெருமை அடிச்சுக்குற அளவுக்கு.

பிள்ளைப்பாசம் அப்படிதான் போல, ஹரிணி பிறந்த இல்லினாய்ஸ் மாகாணத்தில தான் ஆப்ரஹாம் லிங்கன், அதிபர் ஒபாமா அரசியல் செய்து அமெரிக்க அதிபர்கள் ஆனார்கள், நாங்கள் இப்பொழுது வசிக்கின்ற டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்துதான் புஷ்கள் அதிபர் ஆனார்கள். அது மாதிரி தந்தை மகளுக்காற்றும் உதவியா என மகளை அமெரிக்க அதிபராக்கி பாக்கனும் ஒரு சின்ன ஆசை இருக்குங்க, அதே போல மகள் தந்தைக்கு ஆற்றும் உதவியா வருங்கால அதிபர் ஹரிணிக்கு பின் வரும் அமெரிக்க அதிபருக்கெல்லாம் நானே தாத்தா, கொள்ளுத்தாத்தாவா இருக்கனும்னு கூடுதல் ஆசையும் இருக்குங்க.

தந்தையர் தின வாழ்த்துக்கள்.