Sunday, June 21, 2009

தந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து



தந்தையர் தினத்திற்கு ஹரிணி வரைந்த வாழ்த்து அட்டை. ஹரிணிக்கு அப்பா மேல அன்பு அதிகம், அதே போல எனக்கும் , குறிப்பா சொல்லப்போனா, சந்தனமுல்லையின் பப்பு பதிவில் கூட ஹரிணியைப்பத்தி பேசி பெருமை அடிச்சுக்குற அளவுக்கு.

பிள்ளைப்பாசம் அப்படிதான் போல, ஹரிணி பிறந்த இல்லினாய்ஸ் மாகாணத்தில தான் ஆப்ரஹாம் லிங்கன், அதிபர் ஒபாமா அரசியல் செய்து அமெரிக்க அதிபர்கள் ஆனார்கள், நாங்கள் இப்பொழுது வசிக்கின்ற டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்துதான் புஷ்கள் அதிபர் ஆனார்கள். அது மாதிரி தந்தை மகளுக்காற்றும் உதவியா என மகளை அமெரிக்க அதிபராக்கி பாக்கனும் ஒரு சின்ன ஆசை இருக்குங்க, அதே போல மகள் தந்தைக்கு ஆற்றும் உதவியா வருங்கால அதிபர் ஹரிணிக்கு பின் வரும் அமெரிக்க அதிபருக்கெல்லாம் நானே தாத்தா, கொள்ளுத்தாத்தாவா இருக்கனும்னு கூடுதல் ஆசையும் இருக்குங்க.

தந்தையர் தின வாழ்த்துக்கள்.

15 comments:

பழமைபேசி said...

தந்தையர் தின வாழ்த்துகள்!

குடுகுடுப்பை said...

நன்றி பழமையாரே

வெற்றி-[க்]-கதிரவன் said...

//என மகளை அமெரிக்க அதிபராக்கி பாக்கனும் ஒரு சின்ன ஆசை இருக்குங்க, அதே போல மகள் தந்தைக்கு ஆற்றும் உதவியா வருங்கால அதிபர் ஹரிணிக்கு பின் வரும் அமெரிக்க அதிபருக்கெல்லாம் நானே தாத்தா, கொள்ளுத்தாத்தாவா இருக்கனும்னு கூடுதல் ஆசையும் இருக்குங்க.
//

-:)

வாழ்த்துகள்! ஹரிணிக்கு!!

துபாய் ராஜா said...

ஹரிணியின் அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்! ஹரிணிக்கு!!

சந்தனமுல்லை said...

தந்தையர் தின வாழ்த்துகள்! ஹரிணியின் கலை அசத்தல்! உங்கள் எண்ணம் ஈடேறட்டும்!! :-)

குடுகுடுப்பை said...

நன்றி பித்தன்,
நன்றி டிவீயார்
நன்றி துபாய் ராஜா
நன்றி சந்தனமுல்லை

மருதநாயகம் said...

வாழ்த்துக்கள், உங்கள் கனவு நிறைவேறட்டும்

Unknown said...

உண்மைய சொல்லுங்க ஹரிணி அமெரிக்க அதிபர் ஆயிட்டா பிரசிடென்ட் குடுகுடுப்பைன்னு எல்லாரும் கூப்புடுவங்கன்னு தான இந்த ஆசை..

குடுகுடுப்பை said...

முகிலன் said...

உண்மைய சொல்லுங்க ஹரிணி அமெரிக்க அதிபர் ஆயிட்டா பிரசிடென்ட் குடுகுடுப்பைன்னு எல்லாரும் கூப்புடுவங்கன்னு தான இந்த ஆசை..//

ஹரிணியோட இப்போதைய லாஸ்ட் நேம்ல பிரசிடென்ட் ஆனா அது அமெரிக்காவிற்கு ரொம்ப புதுசு

குடுகுடுப்பை said...

மருதநாயகம் said...

வாழ்த்துக்கள், உங்கள் கனவு நிறைவேறட்டும்

நன்றி
மருதநாயகம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான வெளிப்பாடு. அகமகிழ்ந்திருப்பீர்கள் போல !!!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ரவி said...

வாழ்த்துகள் !!!!

Unknown said...

:)